Last Updated : 07 Feb, 2017 10:05 AM

 

Published : 07 Feb 2017 10:05 AM
Last Updated : 07 Feb 2017 10:05 AM

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக பெற்றோரை பார்க்க செல்லாமல் 4 ஆண்டுகளாக பயிற்சி: அந்தமான் சைக்கிள் வீராங்கனையின் விடாமுயற்சி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் கனவை நனவாக்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளாக பெற்றோரைக்கூட பார்க்கச் செல்லாமல் பயிற்சி பெற்று வருகிறார் இந்திய சைக்கிள் வீராங்கனையான டெபோரா ஹெரால்ட்.

அந்தமான் நிகோபார் மாநிலத் தில் இருந்து பெரிய விளை யாட்டு வீரர்களோ, வீராங்கனை களோ இதுவரை பெரிதாக உருவானதில்லை. அந்த சரித்திரத்தை மாற்றி எழுதப் புறப்பட்டுள்ளார் டெபோரா ஹெரால்ட். சிறு வயதில் இருந்தே சைக்கிள் போட்டிகளில் ஆர்வம் கொண்ட இவர் 2012-ம் ஆண்டு நடந்த தேசிய சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் ஜூனியர் பிரிவில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.

இப்போட்டியில் அவரது செயல்பாட்டைப் பார்த்தவர்கள், டெல்லிக்குச் சென்று பயிற்சி பெற்றால் எதிர்காலத்தில் மேலும் சாதிக்க முடியும் என்று கூற 2013-ம் ஆண்டு அந்தமானில் இருந்து டெல்லிக்கு வந்தார் டெபோரா. அதிலிருந்து அவருக்கு சைக்கிள் தான் எல்லாம். தன் பெற்றோரைக் கூட பார்க்கப் போகாமல் டெல்லி யில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார் டெபோரா.

இதுபற்றி டெபோரா கூறிய தாவது:

அந்தமானில் உள்ள ககானா என்ற தீவில் பிறந்த நான் முதலில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டும் போட்டிகளில் ஆர்வமாக இருந்தேன். அதன் பிறகு எனக்கு சைக்கிள் மீது காதல் பிறந்தது. இந்த விளையாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பி னேன். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்ட நான் ஒரு மரத்தின் உச்சியைப் பிடித்து உயிர் தப்பினேன்.

5 நாட்கள் அந்த மரத்தின் இலைகளைத் தின்று உயிர்வாழ்ந்த என்னை மீட்புப் படையினர் மீட்டனர். அந்த சம்பவத்தில் நான் உயிர் பிழைத்ததே விளையாட்டுப் போட்டியில் சாதிக்கத்தான் என்று நினைக்கிறேன். அந்த சவாலையே கடந்த நான், மற்ற எல்லா சவால்களையும் முறியடிக்க முடியும் என்று நம்புகிறேன். முதலில் போர்ட் பிளேயரில் உள்ள சாய் அமைப்பின் பயிற்சி மையத் தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அதைத் தொடர்ந்து பயிற்சிக்காக டெல்லிக்கு வந்துள்ளேன்.

நான் டெல்லிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 4 ஆண்டுகளில் ஒரு முறைகூட என் பெற்றோரைப் பார்க்கவில்லை. அவர்களுடன் தொலைபேசியில் பேசுவதோடு சரி. மேலும் அடுத்த 2 ஆண்டுகளுக்காவது அவர் களைப் பார்க்கும் எண்ணமும் இல்லை. இப்போதைக்கு என் ஆசையெல்லாம் 2020-ல் நடக்க வுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாக வேண்டும் என்பதே. அதுவரையில் அவர்களை பார்க்க மாட்டேன்.

அந்தமானைச் சேர்ந்த யாரும் இதுவரை ஒலிம்பிக்கில் பங்கேற்ற தில்லை. அந்த சாதனையை நான் செய்யவேண்டும் என்று விரும்பு கிறேன். என்னுடைய கஷ்டங்களை எல்லாம் அதற்காக பொறுத்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டி யில் எனக்கு பதக்கம் கிடைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் என் பயிற்சிக்கு தேவையான உதவிகளைச் செய்து தருகிறார்கள். மேலும் இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பும், என் பயிற்சியாளரான ஆர்.கே.சர்மாவும் எனக்கு மிகவும் உதவியாக இருக் கிறார்கள். அவர்களின் ஆதரவால் என் ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தன் ஒலிம்பிக் கனவை நனவாக் குவதன் ஒரு பகுதியாக கொலம் பியா, அமெரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள சர்வதேச சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார் டெபோரா. இதில் வெற்றிபெற்று சர்வதேச தரவரிசையில் குறிப்பிட்ட இடத்துக்குள் வந்துவிட்டால் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x