Last Updated : 01 Jun, 2017 02:42 PM

 

Published : 01 Jun 2017 02:42 PM
Last Updated : 01 Jun 2017 02:42 PM

பந்து வீச்சாளர்களால் இந்திய அணிக்கு அதிக சாதகம்: க்ளென் மெக்ராத் கருத்து

வேகப்பந்து - சுழற்பந்து வீச்சு இணையால் இந்திய அணிக்கு மற்ற அணிகளை விட அதிக சாதகம் அதிகம் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் கூறியுள்ளார்.

8 அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. சென்னை எம்.ஆர்.எஃப் பவுன்டேஷனில் மாணவர்களுக்கு பயிற்சி தர வருகை தந்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ரா. அப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பற்றி அவர் கூறியதாவது.

"கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்திய அணியிடம் மிக வலிமையான தாக்குதல் இருப்பதாக நினைக்கிறேன். அதிலும் அவர்களின் சுழல் - வேகப் பந்து வீச்சு இணை மற்ற அணிகளை விட அவர்களுக்கு அதிக சாதகத்தை தரும்.

பாகிஸ்தானுடனான ஆட்டத்தைப் பொறுத்தவரை, எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் ஆட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் இருந்த வலிமை இல்லையென்றாலும் பாகிஸ்தான் அணியில் இப்போதும் சில தரமான பவுலர்களும், அனுபவமிக்க பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். பாகிஸ்தான் நம்மை ஆச்சரியப்படுத்தலாம்" என்றார்.

அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளில் கண்டிப்பாக இந்தியா இருக்கும் எனக் கூறிய மெக்ராத், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதில் இருக்கும் என்றும். நான்காவது அணியாக தென் ஆப்பிரிக்கா அல்லது நியூஸிலாந்து இருக்கும் என்றும் கணித்துள்ளார்.

இந்தியாவின் பவுலர்களைப் பற்றி பேசுகையில், "இந்திய பவுலர்கள் என்னை ஈர்த்துள்ளனர். உமேஷ் சிறப்பாக வீசுகிறார். பும்ரா ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர். கடைசி ஓவர்களில் அவரது வீச்சு அற்புதமாக இருக்கிறது. சரியனா லெந்தில் வீசுவதோடு நல்ல வேகத்திலும் வீசுகிறார். யார்க்கர் பந்துகளையும் வீசுகிறார். அவர் தொடர்ந்து மேம்படுவார் என நம்புகிறேன்" என்றார்.

ஆஸ்திரேலியாவே இந்தத் தொடரை வெல்லும் என்றும் மெக்ராத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "நான் என்றுமே ஆஸ்திரேலியாவுக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன். என்னப் பொருத்தவரை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் தான் இப்போதைக்கு உலகில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர். இங்கிலாந்து அவர்களது ஊரில் தோற்கடிக்க கடினமான அணியாக இருக்கலாம். இப்போது தான் அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு தொடரை வென்றுள்ளனர். அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரராக இருக்கிறார்". இவ்வாறு மெக்ரா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சர்ச்சைக்கு சீக்கிரம் தீர்வு வரும் என்றும் மெக்ராத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x