

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான பெங்களூரு ஆடுகளம் இரு அணிகளுக் கும் சாதகமாக இருக்கும் வகை யில் தயார் செய்யப்பட்டுள்ள தாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முற்றிலும் சுழலுக்கு சாதகமாக அமைக்கப் பட்ட ஆடுகளம் இந்திய அணிக்கு எதிர்வினையாக அமைந்தது. சூழ்நிலையை சரியாக பயன் படுத்திக்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓஃகீப் 12 விக்கெட்கள் வீழ்த்தி மிரளச் செய்தார்.
மேலும் அவர் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வெளி நாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்தார். உள்நாட்டு சாதகமே (சுழல்) இந்திய அணிக்கு பாதகமாக அமைந்ததால் தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் இதுபோன்று மீண்டும் ஒரு ஆடுகளத்தை இந்திய அணி நிர்வாகம் விரும்பாது என்றே கருதப்படுகிறது.
2-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வரும் முனைப்பில் உள்ளதால் பந்துக்கும் மட்டைக்கும் சமமான வாய்ப்பு இருக்கும் வகையிலான ஆடுகளத்தையே விரும்பக்கூடும்.
இந்நிலையில் கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சுதாகர் ராவ் கூறும்போது, “இந்திய அணியிடம் இருந்து எங்களுக்கு எந்தவிதமான பரிந்துரையும் வரவில்லை. பந்துக்கும் மட்டைக் கும் இடையில் நியாயமான போட்டி இருக்கும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஆடுகளத்தை வழங்குவதே எங்களது நோக்கம். 5 நாட்களும் போட்டி நடைபெற வேண்டும் என விரும்புகிறோம். இரண்டு மற்றும் இரண்டரை நாட்களில் முடிவடையும் போட்டியை நாங்கள் விரும்பவில்லை. ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.
அதனால் தண்ணீர் தெளிப் பதை நிறுத்தவில்லை. போட்டி நடைபெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு வரை தண்ணீர் தெளிப் போம். அதன் பின்னரே மைதா னத்தை உற்றுநோக்கி அதன் தன்மையை அறிய முடியும்’’ என்றார்.