

தமிழ்நாடு மாநில 90-வது சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை குண்டூரில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகள போட்டிக்கும், வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் தேசிய ஓபன் தடகள போட்டிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் தெரிவித்தார்.
முதல் நாளான இன்று 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் டெக்லத்தான், வட்டு எறிதல், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், கம்பம் ஊன்றி உயரம் தாண்டுதல், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், ட்ரிப்பிள் ஜம்ப், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.