

பார்வையற்றவர்களுக்கான உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக பார்வை யற்றோர் கிரிக்கெட் போட்டிகளின் போர்டு கண்காணிப்பாளர் ஜஹாரா பேகம் நிருபர்களிடம் விஜயவாடாவில் கூறியதாவது:
பார்வையற்றவர்களுகான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இம்முறை இந்தியா நடத்துகிறது. இப்போட்டிகள் வரும் 31-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்க தேசம், மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் விளையாடுகின்றன. இதற்காக ரூ.24.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் டெல்லியில் நடக்கிறது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, கடந்த 2012-ல் நடந்த இறுதி போட்டியில் பாகிஸ்தானை வெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த உலகக் கோப்பை போட்டிகளை டெல்லி, மும்பை, குஜராத், பரிதாபாத், புவனேஷ்வர், கொச்சி, பெங்களூரு, ஆந்திரா ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடக் கிறது. ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்திலும் இதில் ஒரு போட்டியை நடத்த திட்டமிடப்பட் டுள்ளது.
இவ்வாறு பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகளின் போர்டு உறுப்பினர் ஜஹாரா பேகம் தெரிவித்தார்.