Published : 18 Apr 2017 01:50 PM
Last Updated : 18 Apr 2017 01:50 PM

ஜாகீர் கானை ஆஸி.க்கே அழைத்து செல்ல விரும்புகிறேன்: பாட் கமின்ஸ் புகழாரம்

டெல்லி டேர் டெவில்ஸ் அணி கேப்டன் ஜாகீர் கான் தலைமையில் ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் விட்டால் அவரை ஆஸ்திரேலியாவுக்கே அழைத்துச் சென்று விடுவேன் என்றும் வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் தெரிவித்தார்.

“நான் ஜாகீர் கேப்டன்சியில் மகிழ்ச்சியுடன் ஆடிவருகிறேன். பவுலர் கேப்டனாக இருப்பது அடிக்கடி கிடைக்கும் வாய்ப்பல்ல. அதுவும் இவரைப்போன்ற அனுபவசாலியான ஒருவர் கீழ் ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

நான் என்னுடன் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

பவுண்டரிகள், சிக்சர்கள் போவதைப் பற்றி கவலைப்படாமல் பந்து வீச அவர் எனக்கு அறிவுரை வழங்கினார், அந்தச் சூழலுக்கேற்ப என்ன மாதிரியான பந்துகளை வீசுவது என்பதை அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்” என்றார்.

பொதுவாக இந்திய பேட்ஸ்மென்களை அயல்நாட்டினர் குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் புகழ்ந்து பேசுவதைக் கண்டிருக்கிறோம், ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் புகழ்ந்துள்ளது ஆச்சரியமேற்படுத்துவதாக உள்ளது.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சை கேப்டன் ஸ்மித் புகழ்ந்து பேசியதற்குப் பிறகு தற்போது பாட் கமின்ஸ் ஜாகீர் கானை புகழ்ந்து பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x