

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை 550 ரன்களுக்குள் கட்டுப் படுத்தியிருந்தால் எங்களுக்கு வாய்ப்பு உருவாகியிருக்கும் என வங்கதேச அணியின் கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பந்து வீச்சின் போது நாங்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்கினோம். இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 550 முதல் 600 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் எங் களுக்கு வாய்ப்பு கிடைத்திருந் திருக்கும். 2-வது இன்னிங்ஸ் மிக கடினமாக இருந்தது.
பந்து வீச்சை பொறுத்தவரை யில் இந்தியாவுக்கு பல்வேறு தேர்வுகள் இருந்தன. அந்த அணி யின் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமில்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல் பட்டனர். இதில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டு சிறந்த திறனை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
பின்கள பேட்டிங்கில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இது அவர்களின் பண்புகளை வெளிப் படுத்தியது. சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. இலங் கைக்கு எதிராக ஒரு சில ஆட்டங் களில் விளையாட உள்ளோம்.
அதில் தவறுகளைச் சரிசெய்து கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இரு இன்னிங்ஸ்களிலும் நாங்கள் தலா 100 ஓவர்களுக்கு மேல் பேட் செய்துள்ளோம். மெகதி ஹசன் பேட்டிங், பந்து வீச்சு என இரண் டிலும் சிறப்பாக செயல்பட்டார்.
பீல்டிங்கில்தான் மோசமாக செயல்பட்டுவிட்டோம். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த போட்டியை கொடுக்க வேண்டு மென்றால் வீரர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு முஸ்பிகுர் ரஹிம் கூறினார்.