

ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 2-வது சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஜோஷ்னா, 8-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஓம்நேயா அப்டெல் ஹவியுடன் மோதினார். 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஷ்னா 8-11, 10-12, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.