ஸ்மித்தின் கால்காப்புக்குள்ளிருந்து பந்தை எடுத்து அவுட் கேட்ட விருத்திமான் சஹா

ஸ்மித்தின் கால்காப்புக்குள்ளிருந்து பந்தை எடுத்து அவுட் கேட்ட விருத்திமான் சஹா
Updated on
1 min read

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி திணறியதை எடுத்துக் காட்டும் விதமாக ஆட்டத்தின் 80-வது ஓவரில் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

ஸ்மித் அப்போது 97 ரன்களில் ஆடி வந்தார். 80-வது ஓவரை ஜடேஜா வீச 3-வது பந்தை ஸ்மித் ஆடும் முயற்சியில் பந்து ஸ்மித்தின் கால்காப்புக்குள் சென்று தஞ்சமடைந்தது.

அது மட்டையின் உள்விளிம்பில் பட்டு கால்காப்புக்குள் தஞ்சமடைந்ததாகக் கருதிய விருத்திமான் சஹா, பந்தை ஸ்மித்தின் கால்காப்புக்குள்ளிருந்து எடுக்க முயன்றார், இந்த முயற்சியில் ஸ்மித் பின் வாங்கி சமநிலை தவறி கீழே விழுந்தார், ஆனால் ‘தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத’(!) ’விக்ரமாதித்த’ விருத்திமான் கீழே விழுந்த ஸ்மித்தின் மீது விழுந்து புரண்டு கால்காப்பிலிருந்து பந்தை எடுத்து அவுட் கேட்டார்.

அவர் அவுட் கேட்க நடுவர்கள் வயிறு குலுங்க சிரித்து விட்டனர். சில நாட்களுக்கு முன் வங்கதேச வீரர் சவுமியா சர்க்கர் பவுல்டுக்கு ரிவியூ கேட்ட வீடியோ வைரலானது. அதுபோல் இந்த விருத்திமான் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் பந்து இன்சைடு எட்ஜும் கிடையாது, மேலும் அது ‘டெட் பால்’ என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in