Last Updated : 21 Aug, 2016 08:59 AM

 

Published : 21 Aug 2016 08:59 AM
Last Updated : 21 Aug 2016 08:59 AM

வாழ்க்கையில் சாதித்ததாக உணர்கிறேன்: மனம் திறக்கும் பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக் கிறது என்றும் கடைசி கட்டத்தில் தான் செய்த சிறிய தவறுகளால் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா வெற்றி பெற்றதாகவும் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கம் வெல்ல முடியவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு உயிரை கொடுத்து விளையாடினேன். தங்கப் பதக்கத்தை மனதில் வைத் துக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டே இருந்தேன்.

இறுதி ஆட்டத்தைப் பொறுத்த வரையில் இருவருமே ஆக்ரோஷ மாக விளையாடினோம், தாக்கு தல் ஆட்டத்தையும் வெளிப்படுத் தினோம். விளையாட்டு போட்டி களில் எப்போதுமே ஒருவர் வெல் வார், மற்றொருவர் தோல்வியடை வார். இந்த நாள் கரோலினாவின் நாளாக அமைந்திருக்கிறது. அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டார். அதேநேரத்தில் நானும் சிறப்பாக விளையாடினேன்.

முதலில் சாக் ஷி மாலிக் வெண் கலம் வென்றார். இப்போது நான் வெள்ளி வென்றிருக்கி றேன். நாங்கள் அனைவருமே சிறப்பாக விளையாடினோம். வாழ்க்கையைப் போலவே விளையாட்டிலும் எல்லோருக் கும் ஏற்ற, இறக்கம் உண்டு. இந்த நேரத்தில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். இந்த வாரம் எனக்கு மிகச்சிறந்ததாக அமைந்தது.

நான் ஒருபோதும் இறுதிப் போட்டியை எட்டுவேன் என நினைக்கவில்லை. ஆனால் அந்த இடத்துக்கு சென்றேன். கரோலினா முதல் நிலை வீராங்கனை என்பதை நான் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் எனது இயல்பான ஆட்டத் தையே விளையாடினேன். முதல் செட்டை நான் கைப்பற் றிய நிலையில் 2-வது செட்டில் கரோலினா மிகவும் நன்றாக விளை யாடினார்.

3-வது செட்டில் 10-10 என சமநிலை வகித்தபோது நான் ஒருசில தவறுகளை செய்தேன். அதனால் அவர் அடுத்தடுத்து 4 புள்ளிகளை பெற்று முன்னிலையை பெற்றார். நான் செய்த சிறிய தவறுகளால் அவர் வெற்றி பெற்றுவிட் டார். கடுமையாக போராடிய போதும் தங்கப் பதக்கத்தை தவறவிட்டு விட்டேன்.

இந்திய பாட் மிண்டனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். தற்போதும் ஏராளமான வீரர்கள் சாதித்து வருகின்றனர். ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் கூட பதக்க வாய்ப்பை நெருங்கினார். இந்த நாளில் நான் வாழ்க்கையில் சாதித்ததாக உணர்கிறேன். ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே எனது கனவாக இருந்து. அதை நான் முடித்து விட்டேன். டோக்கி யோவில் தங்கம் வெல் வேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும்.

அதிக தன்னம்பிக்கை கிடைத்துள்ளதால் அடுத்து சூப்பர் சீரியஸ் பட்டத்தை கூட என்னால் வெல்ல முடியும் என கருதுகிறேன். எனது வெற்றிக்கு பயிற்சியாளர் கோபி சந்த்தான் காரணம். எனக்கு அவர் பல்வேறு கடின பயிற்சிகள் கொடுத்தார். ஒலிம்பிக் போட்டி களுக்காக நான் அதிகளவில் தியாகங்களை செய்துள்ளேன்.

இதேபோன்று கோபிசந்த்தும் ஏராளமான தியாகங்கள் செய்துள்ளார். எந்தநேரமும் அவர் பாட்மிண்டன் கோர்ட்டில்தான் இருப்பார். எனது பெற்றோரும் எனக்காக பல்வேறு விஷயங்களை தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x