

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வுக்கு பதக்கம் கிடைக்கும் போட்டி களில் ஒன்றாக டென்னிஸ் கருதப்படு கிறது. இதன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா ஜோடி களமிறங்குகிறது. 43 வய தான பயஸூக்கு இது 7-வது ஒலிம்பிக் போட்டியாகும்.
1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக் கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பயஸ் வெண்கல பதக்கம் வென்றி ருந்தார். இம்முறை அவருக்கு ஒலிம் பிக்கில் பங்கேற்க அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. தரவரிசையில் பின்தங்கியதால் போபண்ணாவின் உதவி தேவைப்பட்டது.
இதற்கு போபண்ணா எதிர்ப்பு தெரிவித்த போதும், அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் வற்புறுத்திய தால் பயஸூடன் இணைந்து விளையாட சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் போபண்ணாவுடன் ஒலிம்பிக் கிராமத்தில் ஒரே அறையில் தங்குவதை பயஸ் தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயஸ் தாமதமாகவே ரியோ வந்து சேர்ந்துள்ளார். கடந்த புதன் கிழமை மாலையில் வந்து சேர்ந்த அவருக்கு அங்கு சரியான முறை யில் உபசரிப்பு அளிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. பின்னர் பயஸ் இந்திய அணி தலைவர் ராகேஸ் குப்தா அறையில் தங்க வைக்கப்பட்டார்.
முடிவில் ஒருவழியாக நேற்று முன்தினம் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பாக ராகேஷ் குப்பதா கூறும்போது, “பயஸ் எப்போதும் தனியாகவே இருக்க விரும்புவார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுவிட்டது. இதில் எந்தவித சர்ச்சையும் இல்லை. அவரை போன்ற ஒரு ஜாம்பவான் தனி அறையில் தங்க தகுதியானவர்தான். நியூயார்க் போட்டியில் பங்கேற்றதன் காரணமாக பயஸ் ரியோவுக்கு வந்துசேருவதில் தாமதம் ஏற்பட்டது” என்றார்.
பயஸ் தாமதமாக வந்து சேர்ந் ததால் போபண்ணா, செர்பியாவை சேர்ந்த ஜிம்மோன்ஜிக்குடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் பயஸ், போபண்ணா ஜோடி இடையே போதிய பயிற்சிகள் இல்லாமல் போனது. இந்த ஜோடியாக கடைசியாக கடந்த மாதம் சண்டீகரில் கொரியாவுக்கு எதிராக நடைபெற்ற டேவிஸ் கோப்பையில் இணைந்து விளையாடியிருந்தது. இது ஒலிம்பிக்கில் எந்தளவுக்கு இந்த ஜோடிக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பயஸ், போபண்ணா ஜோடி ரியோ ஒலிம்பிக்கில் தங்களது முதல் சுற்றில் இன்று போலந்தின் மார்சின் மட்கோவிஸ்கி, லூக்காஸ் ஹூபோட் ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது. உலக தரவரிசையில் இரட்டையர் பிரிவில் இந்திய அணி 15-வது இடத்தில் உள்ளது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி தங்களது முதல் சுற்றில் சீனாவின் பெங்க் சாய், சாய் ஹெங்க் ஜோடியை சந்திக்கிறது.