Published : 09 Oct 2014 10:50 AM
Last Updated : 09 Oct 2014 10:50 AM

விளையாட்டுச் செய்தித் துளிகள்

# ஐசிசி மக்கள் விருப்ப விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீரர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

# ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமத்தில் இருந்து மாயமாகிய நேபாளம், இலங்கை, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளை சேர்ந்த 7 வீரர்களை தேடும் பணியை தென் கொரிய போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

# அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக டிசம்பர் 28 முதல் ஜனவரி 8 வரை ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துகிறது பாகிஸ்தான். இதில் அங்குள்ள 5 அணிகள் பங்கேற்கின்றன. அதைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி ஜனவரி 11-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

# சார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் ஸ்மித் 101 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x