அஸ்லான்ஷா ஹாக்கி தொடர்: இந்திய அணிக்கு ஸ்ரீஜேஷ் கேப்டன்

அஸ்லான்ஷா ஹாக்கி தொடர்: இந்திய அணிக்கு ஸ்ரீஜேஷ் கேப்டன்
Updated on
2 min read

அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில் பங்கேற்க உள்ள இந்திய ஆடவர் அணிக்கு கேப்டனாக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

26-வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை தொடர் மலேசியாவின் இபோ நகரில் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஸ்ரீஜேஷ் கேப்டனாகவும், மன்பிரீத் சிங் துணை கேப்டனாகவும் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றி ருந்த முன்கள வீரர் குரிந்தர் சிங், நடுக்கள வீரர்கள் சுமித், மன்பிரித், கோல் கீப்பர் சுராஜ் கர்கீரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை மற்றும் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றை மனதில் வைத்து இளம் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பையில் இளம் வீரர்களாக ஹர்ஜித் சிங், ஹர்மான் பிரித் சிங், மன்தீப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த தொடரில் இவர்களது சிறப் பான பங்களிப்பால் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன் னேறியது. எனினும் இறுதிப் போட்டி யில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தது.

அணி தேர்வு குறித்து பயிற்சி யாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக லீக் அரை இறுதி ஆட்டம், ஆசிய கோப்பை, ஆடவர் ஹாக்கி லீக் இறுதிப் போட்டி ஆகிய 3 முக்கிய தொடர் களை மனதில் வைத்தே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளோம். இந்த தொடர்களுக் கான அணி சேர்க்கை புதிதாக அமைய வேண்டும் என முயற்சி செய்துள்ளோம்.

இந்த தொடர்களுக்கு முன்ன தாக பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாட உள் ளோம். இதனால் நமது அணியின் திறனை சோதித்துக்கொள்ள சிறந்த உதவியாக இருக்கும். மேலும் வீரர்களிடம் இருந்து நாம் எந்த வகையிலான ஆட்டத்தை விரும்பு கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்’’ என்றார்.

அஸ்லான் ஷா தொடருக்கான அணியில் நடுக்கள வீரர்களாக அனுபவசாலியான சர்தார் சிங், கங்குஜம் ஆகியோருடன் ஹர்ஜித் சிங், சுமித், மன்பிரித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தற்காப்பு வீரர்களாக ரூபிந்தர் பால்சிங், பிரதீவ் மோர், சுரேந்தர் குமார், ஹர்மான்பிரித் சிங், குரிந்தர் சிங் ஆகியோரும் பார்வர்டு லைனில் எஸ்.வி.சுனில், தல்விந்தர் சிங், ஆபான் யூசுப், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்:

கோல்கீப்பர்கள்:

ஸ்ரீஜேஷ் (கேப்டன்), சுராஜ் கர்கீரா

தற்காப்பு வீரர்கள்:

பிரதீப் மோர், சுரேந்தர் குமார், ரூபிந்தர்பால் சிங், ஹர்மான்பிரீத் சிங், குரிந்தர் சிங்.

நடுக்கள வீரர்கள்:

கங்குஜம், சுமித், சர்தார் சிங், மன்பிரித் சிங், ஹர்ஜித் சிங், மன்பிரித்.

முன்களம்:

எஸ்.வி.சுநில், தல் விந்தர் சிங், மன்தீப் சிங், ஆபான் யூசுப், ஆகாஷ்தீப் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in