

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது.
அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்டசாலி. கம்பளம் விரிக்கப்பட்டதைப் போன்ற அழகான மைதானம்” என்றார்.