

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பங்கேற்கும் வாலிபால் அணிக்கான தேர்வு திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் இருந்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் 56 பேரில் 47 பேர் இத்தேர்வு போட்டியில் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில், எஸ்.மது கௌரி (வாடிப்பட்டி), எம்.ஜெயஸ்ரீ (ஈரோடு), வி.கிருபா, ஜெ.அனிஷா (திருப்பூர்), எஸ்.அனிஷா, டி.தேவிகா, பிளசிரஞ்சிதா(சென்னை) சுவாதினி, ஆர்த்தி, எஸ்.ஷாலினி, ஆர்.சுப்ரஜா(சேலம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு திருப்பூரில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எம்.முருகேஸ்வரி தெரிவித்தார்.