

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கிங்ஸ் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிங்ஸ் பள்ளியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகமும் இணைந்து தென்னிந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகளை நடத்துகின்றன.
இந்த போட்டி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 பள்ளிகளிலிருந்து 460 மாணவர்கள் 37 குழுக்களாக போட்டிகளில் பங்கேற்கிறார்கள். போட்டிகள் ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது.
10 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் சீனியர் பிரிவிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும் விளையாடுவர். போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடத்தப் படுகிறது.