வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி உத்வேகத்தைத் தந்துள்ளது: ரஹானே

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி உத்வேகத்தைத் தந்துள்ளது: ரஹானே
Updated on
1 min read

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றி எங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய நிலையில், இது தொடர்பாக ரஹானே மேலும் கூறியிருப்பதாவது:

நிச்சயமாக இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமான வெற்றிதான். ஆசிய கோப்பை போட்டியின் ஆரம்பத்திலேயே உத்வேகத்தை பெற்றிருக்கிறோம். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதை எதிர்நோக்கி யிருக்கிறோம் என்றார். கடந்த 5 போட்டிகளில் நீங்கள் சரியாக விளையாடவில்லை. அதனால் இந்தப் போட்டியில் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடினீர்களா என்று ரஹானேவிடம் கேட்டபோது, “வெளிப்படையாக சொல்வதானால் நான் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. நான் எவ்வித பதற்றமும் இன்றி இருந்தேன். இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

ஆரம்பத்தில் நிதானமாக ஆடிவிட்டு பின்னர் எனது வழக்கமான ஷாட்களை ஆட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஏனெனில் ஆடுகளம் மெதுவானதாக இருந்ததால் ஆரம்பத்திலேயே அடித்து ஆடுவது கடினமாகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in