Last Updated : 13 May, 2017 09:39 AM

 

Published : 13 May 2017 09:39 AM
Last Updated : 13 May 2017 09:39 AM

ஆசிய மல்யுத்த போட்டி இறுதிப் போட்டியில் சாக் ஷி மாலிக்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் சாக் ஷி மாலிக், வினேஷ் போகத், திவ்யா கரன் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதன் மூலம் இவர்கள் 3 பேரும் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவு கால் இறுதியில் 24 வயதான சாக் ஷி மாலிக் 6-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நபிராவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் சாக் ஷி மாலிக் 15-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஆயுலிம் கஸ்ஸிமோவாவை வீழ்த்தினார்.

55 கிலோ எடைப் பிரிவு கால் இறுதியில் வினேஷ் போகத் 10-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் செவரா எஸ்மருடோவாவையும், அரை இறுதியில் சீனாவின் குய் ஜாங்கை 4-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

69 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கரன் கால் இறுதியில் 2-0 என்ற கணக்கில் தைபேவின் ஷென் ஷி ஹூவாங்கையும், அரை இறுதியில் 12-4 என்ற கணக்கில் கொரியாவின் ஹையோனியோங் பார்க்கையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரீது போகத் அரை இறுதியில் 0-9 என்ற கணக்கில் ஜப்பானின் சுசகியிடம் தோல்வியடைந்தார். எனினும் ரீது போகத் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x