

கனடா ஓபன் பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட இந்திய வீரர்கள் அஜெய் ஜெயராம், பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப் படாததால் அதிருப்தியடைந்த ரவிசாஸ்திரி சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலில் தனது கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது அவரது தனிப்பட்ட விஷயம் என்று பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் தலைவர் ஜோசன் மரியா பர்டோமியு தெரிவித்துள்ளார்.
6 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0 1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.
பிரேசில் கால்பந்து நட்சத் திரம் நெய்மர் பார்சிலோனா கிளப் பிலிருந்து விலகக்கூடும் என தகவல் வெளியான நிலை யில் நெய்மரின் ஒப்பந்தத்தை ஐந்தாண்டுகளுக்கு பார்சி லோனா நீடித்துள்ளது.