

தென் ஆப்ரிக்காவில் நடை பெற்ற ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் இறுதிப் போட்டி யில் தோல்வியடைந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டி யில் வேலவன் செந்தில் குமார், எகிப்தின் முகமது எல்ஷெர் பினியை எதிர்த்து விளையா டினார்.
இதில் வேலவன் 8-11, 3-11, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டார். கடந்த வாரம் நடை பெற்ற பார்க்வியூ ஒபன் இறுதிப் போட்டியிலும் வேலவன், முகமது எல்ஷெர்பினியிடமே வீழ்ந்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.