வங்கதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகிறார் கார்ட்னி வால்ஷ்?

வங்கதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகிறார் கார்ட்னி வால்ஷ்?
Updated on
1 min read

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு மேதையும் கேப்டனுமான கார்ட்னி வால்ஷ் வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வங்கதேச வாரியமோ, கார்ட்னி வால்ஷோ எதுவும் தெரிவிக்கவில்லையென்றாலும் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ செய்திகளின் படி 2019 உலகக்கோப்பை தொடர் வரை கார்ட்னி வால்ஷ் வங்கதேச பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

தற்போதைய பவுலிங் பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து பெரிய திமிங்கிலத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடித்துப் போட்டுள்ளதாகவே தெரிகிறது.

கார்டன் கிரீனிட்ஜுக்குப் பிறகு ஒரு மே.இ.தீவுகள் வீரர் வங்கதேச அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக்கின் பயிற்சி காலக்கட்டத்தில் தங்கள் சொந்த மண்ணில், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளை ஒருநாள் தொடரில் வென்று சாதித்ததோடு 2015 உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறி இந்தியாவிடம் உதை வாங்கி வெளியேறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in