Last Updated : 07 Feb, 2017 09:47 AM

 

Published : 07 Feb 2017 09:47 AM
Last Updated : 07 Feb 2017 09:47 AM

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து குக் விலகல்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அலாஸ்டர் குக் விலகியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் அலாஸ்டர் குக். 2012-ம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இதுவரை 59 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இந்த காலகட்டத் தில் 2 ஆஷஸ் தொடர்கள் உட்பட பல தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 2012-ம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதையும், 2013-ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் கேப்டன் விருதையும் வென் றுள்ளார். மேலும் 140 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11 ஆயிரத்து 057 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற டெஸ்ட் கேப்டனாக இருந்த குக்கின் வாழ்க்கையை சமீபத்தில் நடந்த இந்தியத் தொடர் புரட்டிப் போட்டது. இந்தத் தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை புரட்டி எடுத்ததால் கேப்டன் பொறுப்பில் இருந்து குக் விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்தியாவில் தோனியின் கையிலிருந்த கேப்டன் பொறுப்பை இளம் வீரரான கோலியிடம் கொடுத்ததைப் போல இங்கிலாந்திலும் குக்குக்கு பதில் இளம் வீரரான ஜோ ரூட்டை கேப்டனாக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்தன.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அலாஸ்டர் குக் நேற்று அறிவித்தார். அதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் கோலின் கிரேவ்ஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இது தொடர்பாக குக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்ததை பெருமையாக நினைக் கிறேன். கேப்டன் பதவியில் இருந்து விலகுவது சற்று கடின மான முடிவுதான். இருப்பினும் இந்த முடிவை சரியான நேரத்தில் எடுப்பதாக கருதுகிறேன். இந்த நேரத்தில் என் தலைமையில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும், பயிற்சி யாளர்களுக்கும், அணி ஊழியர் களுக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டனுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

குக் விலகியதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுப்பதற்கான நடை முறைகளை தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநரான ஆன்ட்ரூ ஸ்டாரஸ் இதுபற்றி கூறும்போது, “இங்கி லாந்து அணியின் கேப்டனாக குக் சிறப்பாக பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்க தகுதியான வீரர்கள் பலரும் இங்கிலாந்து அணியில் உள்ளனர். வீரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அடுத்த கேப்ட னாக் ஜோ ரூட் தேர்ந்தெடுக் கப்படலாம் என்று கூறப்படுகிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x