

ரியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஹாட்ரிக் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.
ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் அரை இறுதி, இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. முதலில் நடைபெற்ற அரை இறுதியில் பந்தய தூரத்தை 9.86 விநாடியில் கடந்து உசேன் போல்ட் முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதி சுற்றில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், ஜமைக்காவின் யோகன் பிளேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முதல் 50 மீட்டர் தூரம் வரை காட்லின் முன்னிலை வகித்தார். பின் எழுச்சி கண்ட போல்ட் பந்தய தூரத்தை 9.81 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் ஹாட்ரிக் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். ஏற்கெனவே இவர் 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக், 2012-ல் லண்டன் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.
அமெரிக்காவின் ஜஸ்டின் காட் லின் 9.89 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும், கன டாவின் ஆன்ட்ரி டி கிராசி 9.91 விநாடி களில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
வெற்றி குறித்து உசேன் போல்ட் கூறும்போது, ''100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதி போட்டியில் அதிவேகமாக ஓடவில்லை என்றாலும் முதலிடம் பிடித்தேன். எனது உலக சாதனையான 9.58 விநாடிகளுக்கு அதிகமாகதான் தற்போது இலக்கை அடைந்தேன்.
இதற்கு காரணம் அரை இறுதிக் கும், இறுதி போட்டிக்கும் குறைந்த காலஇடைவெளி இருந்ததுதான். 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று அழியா புகழ் பெறுவேன் என்ற நம் பிக்கை உள்ளது. 200 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 19 விநாடிகளில் அடைவதே குறிக்கோள்'' என்றார்.