

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ டை, இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை 12 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில், ஒரு பந்தை தடுப்பதற்காக பாய்ந்த போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த காயத்தை தொடர்ந்து ஆண்ட்ரூ டை நீண்டநாட்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இந்த ஐபிஎல் தொடரில் அவர் இனி ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.