

இந்திய ‘லிட்டில் மாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள். இதனையடுத்து உலகெங்கிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
இன்று மும்பை இந்தியன்ஸ் அணியினர் சச்சின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, “ஹேப்பி பர்த் டே பாஜி, கடவுள் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிப்பாராக. எப்போதும் என் கிரிக்கெட் ஹீரோ சச்சினே” என்று கூறியுள்ளார் கோலி
ட்விட்டரில் மிகவும் ‘பிசி’யாக இருந்து வரும் விரேந்திர சேவாக், “இந்தியாவில் காலத்தை நிறுத்தும் மனிதனுக்கு.. ஹேப்பி பர்த் டே சச்சின்” என்று ட்வீட்டியுள்ளார்.
அனில் கும்ப்ளே, “உலகம் கண்ட மிகவும் உத்வேகமான விளையாட்டு வீரர் சச்சின்” என்றார்.
கவுதம் கம்பீர், “எல்லாம்வல்ல இறைவன் உங்கள் மீது தொடர்ந்து புன்னகைப்பார்வையை வீசட்டும்” என்றார்.
ஹர்பஜன் சிங், “மகிழ்ச்சியாக இருங்கள், நன்றாக இருங்கள், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
உமேஷ் யாதவ் தனது வாழ்த்துச் செய்தியில், “சிறப்பான நாள், சிறப்பான மனிதர், சிறப்பான கொண்டாட்டம், உங்கள் கனவுகளும் ஆசைகளும் உண்மையாகட்டும்” என்று கூறியுள்ளார்.
மொகமது கயீஃப்: ”கோடி மக்களின் உணர்வுகளைத் தொட்டவர், எப்போதுமே நம் வாழ்வின் அங்கமாக விளங்குபவர் சச்சின்”
ஆடம் கில்கிறிஸ்ட்: ஹேப்பி பர்த் டே சச்சின் என்று ட்வீட் செய்துள்ளார்.
மைக்கேல் கிளார்க்: கிரேட் சச்சினுக்கு ஹேப்பி பர்த் டே... இனிவரும் நாளும் ஆண்டும் இனிதாக அமையட்டும் என்று கூறியுள்ளார்.
ரிஷப் பந்த்: ஹேப்பி பர்த் டே சச்சின் சர், வரும் காலங்களிலும் எங்களைப் போன்ற லட்சக்கணக்கானோருக்கு தூண்டுகோலாக இருப்பீர்கள், என்றார்.
குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்: “கிரிக்கெட் கடவுளுக்கு வாழ்த்துக்கள்”
கிரிக்கெட் கண்ட ஆகச்சிறந்த பேட்ஸ்மெனான சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களை அடித்த சத சதங்களின் நாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.