இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்

இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்
Updated on
1 min read

இப்போது விளையாடியதைவிட கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று இந்திய கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி டிரா ஆனது குறித்து அவர் மேலும் கூறியது:

இப்போட்டியில் பந்து வீச்சாளர்களின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகவே இருந்தது. முக்கியமாக நீண்ட நாள்களுக்குப் பின் களமிறங்கியுள்ள ஜாகீர் கான் சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு கட்டத்தில் தோல்வியடைந்து விடுவோம் என்ற நிலை கூட ஏற்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு இது நல்ல அனுபவமாகவும் இருந்தது. மிடில் ஓவர்களில் நாங்கள் முக்கியமாக பந்து வீச்சாளர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடி இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்தது என்றார் தோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in