Published : 10 Jul 2016 10:44 AM
Last Updated : 10 Jul 2016 10:44 AM

யூரோ கோப்பையில் பட்டம் வெல்வது யார்?

யூரோ கோப்பை கால்பந்து தொட ரின் இறுதிப்போட்டியில் இன்று நள்ளிரவு போட்டியை நடத்தும் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

செயின்ட் டெனிஸ் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி இஎஸ்பிஎன் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய் கின்றன. பிரான்ஸ் அணி கடந்த 1984 மற்றும் 2000-ம் ஆண்டு நடை பெற்ற யூரோ தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தற்போது 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத் துடன் உள்ளது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் பிரான்ஸ் கூடுதல் பலத்துடன் உள்ளது. போர்ச்சுக்கலுடன் ஒப்பிடுகையில் அந்த அணி கோப்பை வெல்ல சற்று அதிகமான வாய்ப்பு இருப் பதாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் அணி தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரராக கிரிஸ்மான் உள்ளார். அவர் இந்த தொடரில் 6 கோல்கள் அடித்து உள்ளார். அரையிறுதியில் உலக சாம்பியனான ஜெர்மனிக்கு எதிராக 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

பால் போக்பா, மட்டுய்டி, லோரிஸ், ஆலிவியர் கிரவுட், டிமிட்ரி பயேட் போன்ற துடிப்பான வீரர்களும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இதில் கிரவுட், பயேட் ஆகியோர் இந்த தொடரில் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.

போர்ச்சுக்கல் அணி லீக் சுற்றில் தட்டுத்தடுமாறியே 3 ஆட்டத்தையும் டிராவில் முடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் கூடுதல் நேரத்திலும் காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டிலும் வெற்றியை பெற்றது. ஆனால் அரையிறுதியில் சிறப்பாக விளையாடியது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த தொடரில் 3 கோல்கள் அடித் துள்ளார். அரையிறுதியில் அவர் தலையால் முட்டி அடுத்த கோல் சிறப்பம்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 2-வது கோல் அடிக்க வும் அவர் உதவியாக இருந்தார்.

ரொனால்டோவை தவிர லூயிஸ் நானி, குரேஷ்மா ஆகியோரும் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். போர்ச்சுக்கல் இதுவரை யூரோ கோப்பையை வென்றது இல்லை. சொந்த நாட்டில் 2004-ல் நடைபெற்ற யூரோ தொடரில் 2-வது இடத்தை பிடித்தது. தற் போது முதல் முறையாக கோப் பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது. சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள் ளன. இதில் பிரான்ஸ் 18 ஆட்டத் தில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த ஆட்டங் களில் பிரான்ஸ் அணி தரப்பில் 49 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. போர்ச்சுக்கல் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தரப்பில் 28 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தி ருந்தது.

பிரான்ஸ் அணி சொந்த மண் ணில் எப்போதுமே சிறப்பாக விளை யாடக்கூடிய அணி. அந்த அணி 1984 யூரோ தொடரையும், 1998 உலகக் கோப்பையையும் சொந்த மண்ணில் கைப்பற்றியுள் ளது. இம்முறையும் அதே உத்வேகத்து டன் களம் காண்கிறது. ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி பிரான்ஸ் அணிக்கு எதிராக இதுவரை வெற்றி பெற்றதில்லை. மாறாக 10 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. யூரோ தொடரில் இரு அணிகளும் இதற்கு முன்னர் இரு முறை சந்தித்துள்ளன.

1984 மற்றும் 2000-ம் ஆண்டு யூரோ தொடர்களின் அரை யிறுதியில் போர்ச்சுக்கல் அணியை பிரான்ஸ் வீழ்த்தியுள்ளது. இந்த இரு ஆட்டங்களிலும் முறையே மைக்கேல் பிளாட்டினி, ஜிடேன் ஆகியோர் முத்திரை பதித்தனர். 2006 உலகக் கோப்பை அரை யிறுதியிலும் பிரான்ஸ் அணியிடம் போர்ச்சுக்கல் தோல்வியை தழுவி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x