பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையுடன் தோனி

பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையுடன் தோனி
Updated on
1 min read

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லண்டல் ஓவல் மைதானத்தில் மோதின.

ஆக்ரோஷமான இந்த ஆட்டத்தைக் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனப்போராட்டத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் 'மிஸ்டர் கூல்' என வர்ணிக்கப்படும் இந்திய அணி யின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி போட்டி தொடங்கும் முன்னதாகவே இருநாட்டு மனங் களையும் வென்றெடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் குழந்தையை, தோனி தன் கையில் தூக்கி வைத்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று நேற்று சமூக வலை தளங்களில் வெளியானது.

அடுத்த நிமிடமே இது வைரல் ஆனது. விளையாட்டு என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இதை உணர்த்தும் விதமாகவே சர்ப்ராஸின் மகன் அப்துல்லாவை, தோனி கைகளில் ஏந்தியபடியான படத்தைப் பகிர்ந்துள்ளதாக சமூக வலை தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அப்துல்லாவுடன் தோனி இருக்கும் படம் பாகிஸ்தான் நாட்டிலும் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகன் அப்துல்லாவை தோனி கைகளில் தூக்கியபடி வெளியாகி உள்ள படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in