இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரை ‘குரங்கு’ என்ற மலிங்கா: விசாரணைக்கு உத்தரவு

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரை ‘குரங்கு’ என்ற மலிங்கா: விசாரணைக்கு உத்தரவு
Updated on
1 min read

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரை கிரிக்கெட் வீரர் மலிங்கா ‘குரங்கு’ என்று வசைபாடியதால் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போனதால் இலங்கை அணி வீரர்களின் உடல்தகுதியை விமர்சித்து, அவர்களின் கிரிக்கெட் ஆயுள் குறித்து கேள்வி எழுப்பினார் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா.

இது குறித்து ஜெயசேகரா கூறியதாவது: “நம் வீரர்களின் மோசமான உடல்தகுதியையே நாம் விமர்சித்தேன், மலிங்காவை குறிப்பிட்டு நான் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் பொதுவெளியில் என்னை அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக தொலைக்காட்சி ஒன்றில் மலிங்கா கூறிய போது, “நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களின் விமர்சனங்கள் பற்றி கவலையில்லை. குரங்குக்கு கிளியின் கூடு பற்றி என்ன தெரியும்? கிளியின் கூட்டுக்குள் சென்ற குரங்கு அதைப் பற்றி பேசுவது போல் உள்ளது” என்று ஜெயசேகராவுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும் என்பதை இந்த உருவகம் மூலம் சாட சிக்கல் எழுந்தது.

மலிங்கா விமர்சனத்துக்குப் பிறகு அமைச்சர் மலிங்கா குறித்துக் கூறும்போது, “ஐபிஎல் கிரிக்கெட்டி. 4 ஓவர்கள் வீசுவதற்கு தங்கள் உடல் தகுதியை உயர்த்திக் கொள்கின்றனர், இவர்களுக்கு நாட்டுக்காக ஆடப் பிடிக்கவில்லை, பணத்திற்காக ஐபிஎல் கிரிக்கெட்தான் இவர்களுக்கு பிடித்துள்ளது” என்று சாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in