மேட்ச் ஃபிக்ஸிங்: ஸ்பெயின் டென்னிஸ் வீரருக்கு 5 ஆண்டு தடை

மேட்ச் ஃபிக்ஸிங்: ஸ்பெயின் டென்னிஸ் வீரருக்கு 5 ஆண்டு தடை
Updated on
1 min read

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்பெயின் டென்னிஸ் வீரர் கில்லர்மோ ஒலாசோவுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரவரிசையில் 236-வது இடத்தில் இருக்கும் கில்லர்மோவுக்கு ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சேலஞ்சர் மற்றும் பியூச்சர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் கில்லர்மோவுக்கு 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படை யில் இந்தத் தண்டனையை விதித்துள்ளது டென்னிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு.

இந்த மூன்றுமே 2010-ல் நடந்தவையாகும்.

இது தொடர்பாக டென்னிஸ் ஊழல் தடுப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஊழல் தடுப்பு கல்வி தொடர்பான கருத்தரங்கு மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு, அபராதம் முழுவதையும் கட்டிவிடும்பட்சத்தில் கில்லர்மோவின் தண்டனைக் காலம் மூன்றரை வருடங்களாகக் குறைக்கப்படலாம்.

5 ஆண்டு தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. அதனால் இந்த நிமிடம் முதல் தொழில்முறை டென்னிஸ் சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களால் நடத்தப்படும் எந்தப் போட்டியிலும் கில்லர்மோ பங்கேற்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இதுவரை 10 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் கில்லர்மோ. கடந்த 8 ஆண்டுகளில் கில்லர்மோ சம்பாதித்த பரிசுத் தொகையை விட இப்போது விதிக்கப்பட்டுள்ள அபராதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in