

சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கால்பந்து லீக் போட்டியில் ஸ்போர்ட்டிங் ஸ்டார், எஸ்.சி.ஸ்டெட்ஸ் அணிகள் வெற்றி கண்டன.
சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடை பெற்று வருகின்றன. போட்டியின் 2-வது நாளான வெள்ளிக்கிழமை முதல் டிவிசன் போட்டிகள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் ஸ்டார் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி. அணியைத் தோற்கடித்தது. ஸ்போர்ட்டிங் ஸ்டார் தரப்பில் ஆனந்த், பிரிட்டோ ஆகியோர் தலா ஒரு கோலும், சென்னை எப்.சி. தரப்பில் ராஜேந்தர் குமார் ஒரு கோலும் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் எஸ்.சி.ஸ்டெட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் யூத் பெஸ்டிவல் அணியை வீழ்த்தியது. எஸ்.சி.ஸ்டெட்ஸ் தரப்பில் திலிபன், நந்தகுமார் ஆகியோர் தலா ஒரு கோலும், மெட்ராஸ் யூத் பெஸ்டிவல் அணி தரப்பில் சந்தோஷ் ஒரு கோலும் அடித்தனர்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டார் ஜுவனைல் அணியையும், ஆர்.பி.எப்., சேலஞ்சர்ஸ் யூனியனையும் சந்திக்கின்றன.