

கரீபியன் டி 20 லீக் தொடரில் நேற்று முன்தினம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்படாஸ் டிரைடென்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.
ஆம்லா - டிவைன் பிராவோ ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 92 பந்துகளில் 150 ரன்கள் சேர்த் தது. இதற்கு முன்னர் 2007 ஐபிஎல் தொடரில் லோகேஷ் டக்வாலே, சாய்ராஜ் பகதுலே ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் குவித் ததே சாதனையாக இருந்தது. இது தற்போது முறியடிக் கப்பட்டுள்ளது. ஆம்லா 81,பிராவோ 66 ரன் சேர்த்தனர்.
171 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பார்படாஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் டிரின் பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.