

தரம்சலாவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. தொடக்க வீரர் அஜிங்கிய ரஹானே அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
ரஹானே 70 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 22 ரன்கள் எடுத்தும் விளையாட, இந்தியா 24-வது ஓவரில் தவன் விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்கத்தில் தவன் அதிரடி ஆட்டம் ஆடி 35 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆந்த்ரே ரசல் வீசிய 136 கிமீ வேக பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் டேரன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெய்லரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி அபாயகரமாக ஆடினார் தவன். ஆனால் அரைசதம் எடுக்கும் முன்பு ஹூக் செய்ய முயன்று அவுட் ஆனார்.
தொடக்க விக்கெட்டுக்காக தவன், ரஹானே ஜோடி 70 ரன்களைச் சேர்த்தனர், தற்போது விராட் கோலி, ரஹானே ஜோடி 2வது விக்கெட்டுக்காக 58 ரன்களைச் சேர்த்துள்ளனர்.