Published : 17 Jun 2016 09:37 AM
Last Updated : 17 Jun 2016 09:37 AM

வேல்ஸ் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து

யூரோ கால்பந்து தொடரில் நேற்று மாலை பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து-வேல்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் வேல்ஸ் முதல் கோலை அடித்தது. ஃப்ரீகிக் மூலம் இந்த கோலை கரேத் பேல் அடித்தார். இதனால் முதல் பாதியில் வேல்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்தது. கோல் கம்பத்துக்கு மிக அருகே வைத்து இந்த கோலை வார்டி அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

இதில் 2-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டுரிட்ஜ் கோல் அடிக்க முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு இது முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் அந்த அணி ரஷ்யாவுடன் டிரா செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x