

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக 9 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.
முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி, இலங்கையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 10.3 ஓவர்களில் 39 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் டாம் கூப்பர் மட்டுமே இரட்டை இலக்கத்தை (16 ரன்கள்) எட்டினார். இதுதான் சர்வதேச டி20 போட்டியில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர்.
இலங்கைத் தரப்பில் மேத்யூஸ், மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தில்ஷான் 12, ஜெயவர்த்தனா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக குசல் பெரேரா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.