

சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால் எப்போதும் சாதிக்கலாம். அதற்கு வயது தடையில்லை என நிரூபித்து காட்டி வருகிறார் நம்பிஷேசன். தனது 83 வயதிலும் தடகளப் போட்டிகளில் பங்கேற்று இதுவரை மொத்தம் 75 தங்க பதக் கங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆர்.நம்பிசேஷன் (83). தனது பள் ளிப் பருவத்தில் இருந்தே ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று வருகி றார். மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு ஓட்டப் பந்தயப் போட்டி களில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
தனது 20 வயதில் ரயில்வே வாரிய தேர்வில் வெற்றி பெற்று தெற்கு ரயில்வேயில் பணிமனை தொழில்நுட்ப அலுவலராக பணி யில் சேர்ந்தார். ஆனாலும், தட களப் போட்டியில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் ரயில்வே துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
சென்னை அண்ணாநகரில் தற்போது வசித்து வரும் இவர், தனது 83-வது வயதிலும் தொடர்ந்து தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இது தொடர்பாக ஆர்.நம்பி ஷேசன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
சிறுவயதில் இருந்தே எனக்கு ஓட்டப் பந்தயம் என்றால் மிகவும் பிடிக்கும். படிக்கும்போதே மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டி களில் பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளேன். விளையாட்டுத் துறை ஒதுக்கீடு மூலம் அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென முயற்சித்தேன். ஆனால், ரயில்வே நடத்திய தேர்வில் பொதுப் பிரிவிலேயே தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தேன்.
அதன் பிறகு, ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தடகளப் போட்டிகளில் பங்கேற் பேன். இதுமட்டுமல்லாமல், பல் வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப் படும் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறேன். இதற்காக தினமும் 2 மணி நேரம் பயிற்சி செய்வேன். 800 மீட்டர், 1500 மீ, 5000 மீ, 10,000 மீ தூரம் பிரிவுகளில் ஓடி வெற்றி பெற்றுள்ளேன். 1961-ல் மாரத்தான் போட்டியில் பங்கேற்று 26 கிமீ தூரம் ஓடி வெற்றி பெற்றுள்ளேன். இதுவரையில் மொத்தம் 75 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளேன்.
ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணி சார்பில் நான் பங்கேற்று 800 மீ, 1,500 மீ மற்றும் 5,000 மீ ஓட்டத்தில் பங் கேற்று தங்கப் பதக்கங்களை வென் றுள்ளேன். சீனாவில் வரும் செப்டம் பர் மாதம் நடைபெறும் ஆசிய மூத்தோர் தடகள போட்டிக்கு நான் தகுதி பெற்றுள்ளேன்.
இப்போதெல்லாம், பள்ளி மாண வர்களுக்கே பல்வேறு நோய்கள் வருவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் இருந்தே தினமும் சாதாரண உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இதற்கு பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். நோயின்றி வாழ மனதையும், உடலையும், உறுதிப்படுத்த உடற்பயிற்சிகள் அவசியமாக இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.