மீண்டும் ரன் குவிப்புக்குத் திரும்புவார் விராட் கோலி: சேவாக் நம்பிக்கை

மீண்டும் ரன் குவிப்புக்குத் திரும்புவார் விராட் கோலி: சேவாக் நம்பிக்கை
Updated on
1 min read

கோலி போன்ற வீரர்களை நீண்ட நாட்களுக்கு ரன் எடுக்காமல் செய்ய முடியாது, அவர் விரைவில் பார்முக்குத் திரும்பி மீண்டெழுவார் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியும் சரியாக ஆடவில்லை, அவரது அணியும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது.

இந்நிலையில் விராட் கோலி விரக்தியின் உச்சத்தில் இருப்பதால் அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்புவது பற்றி ரசிகர்களிடத்தில் ஐயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சேவாக் கூறும்போது,

“எந்த வீரராக இருந்தாலும் மோசமான ஃபார்ம் காலக்கட்டம் என்ற ஒன்று உண்டு. சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே விதத்தில் ஆடியிருக்க மாட்டார்.

ஏன் உங்கள் ஊடகங்களே கூட காலத்திற்கேற்ப கேள்விகளை மாற்றுவதில்லையா? எனவே காலமாறினால் ஃபார்மும் மாறும்.

எந்த ஒரு நல்ல வீரருக்கான அடையாளமும் என்னவெனில் மோசமான காலக்கட்டத்திலிருந்து அவர்கள் மீண்டெழும் விதமே. அதே போல் விராட் (கோலி) அறிவார் எந்த வழியில் மீண்டெழுவது என்பதை, எனவே கவலை வேண்டாம்” என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in