Published : 31 Mar 2014 11:01 AM
Last Updated : 31 Mar 2014 11:01 AM

அகமது ஷெஸாத் சதம்: வங்கதேசத்தை வீழ்த்தியது பாக்.

டாக்கா

உலகக்கோப்பை ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷெஸாத் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார்.

குரூப்-2 பிரிவில் வங்கதேசத் துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் உமர் அக்மல் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷெஸாத் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 62 பந்துகளைச் சந்தித்து 10 பவுண் டரிகள், 5 சிக்ஸர்களை விளாசி 111 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

6-வது விக்கெட்டுக்குக் களமிறங்கி அப்ரிதி 9 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 22 ரன்கள் குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தரப்பில் அப்துர் ரஸாக் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடின இலக்கை விரட்டிய வங்கதேசத்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கைகொடுக்க வில்லை. முதல் 4 விக்கெட்டுகளை 47 ரன்களுக்குள் இழந்த வங்க தேசம் தடுமாறியது. அந்த அணி

யின் ஷகிப் அல் ஹஸன் அதிகபட்ச

மாக 38 ரன்கள் குவித்தார்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப் புக்கு 140 ரன்கள் எடுத்து, 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் உமர்குல் 3 விக்கெட்டுகளும், சயீத் அஜ்மல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சதமடித்து ஆட்டமிழக் காமல் இருந்த அகமது ஷெஸாத் ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றி மூலம் 2 வெற்றி 1 தோல்வியுடன் நான்கு புள்ளிகள் பெற்றுள்ள பாகிஸ்தான் குரூப்-2 பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x