

சர்வதேச குத்துச்சண்டை சம்மேள னத்தின் சார்பில் நடத்தப்படும் ஒலிம் பிக் போட்டிக்கான உலக தகுதிச் சுற்று போட்டி வரும் 16-ம் தேதி அஜர்பை ஜானில் தொடங்குகிறது.
இதில் தேவேந்திரோ சிங், விகாஸ் கிருஷ் ணன் ஆகியோர் தலைமையில் 9 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற் கிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியர்கள் தகுதி பெறுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.
‘‘லைட் பிளை மற்றும் பிளைவெயிட் (49 முதல் 52 கிலோ வரையிலான எடை) பிரிவுகளில் முதல் இரு இடங்களைப் பிடித்தால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். அதேநேரத்தில் மற்ற பிரிவுகளில் முதல் 5 இடங்களைப் பெறும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்தியாவிலிருந்து இதுவரை சிவ தாபா மட்டுமே ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 56 கிலோ எடைப் பிரிவில் தகுதி பெற்றிருந்தார்.
அணி விவரம்:
தேவேந்திரோ சிங் (49 கிலோ), கெளரவ் பிதுரி (52 கிலோ), தீரஜ் ரங்கி (60 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ), மன்தீப் ஜங்ரா (69 கிலோ), விகாஸ் கிரிஷன் (75 கிலோ), சுமித் சங்வான் (81 கிலோ), அம்ரித்பிரீத் சிங் (91 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேல்).