

தெற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இரு அணிகளும் சந்தித்தன. 25வது நிமிடத்தில் இந்தியா முதல் கோலை அடித்தது. கேப்டன் சுனில் ஷேத்ரி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். அடுத்த 9வது நிமிடத்தில் ஹலிஷரனிடம் இருந்து பந்தை பெற்ற ஜிஜி கோலாக மாற்றினார். 45வது நிமிடத்தில் மாலத்தீவின் நஷித் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.
66வது நிமிடத்தில் ஜிஜி மீண்டும் ஒரு கோல் அடித்தார். 75வது நிமிடத்தில் மாலத்தீவின் அம்தான் அலி தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். அதன் பின்னர் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.