Last Updated : 04 Jul, 2016 05:25 PM

 

Published : 04 Jul 2016 05:25 PM
Last Updated : 04 Jul 2016 05:25 PM

டெஸ்ட் போட்டிகளுக்கு சிறந்த பவுலர் மொகமது ஷமி: விராட் கோலி புகழாரம்

டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசும் அளவை துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பவர் மொகமது ஷமி என்று கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

2015 ஐசிசி உலகக்கோப்பைக்குப் பிறகு 15 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் ஆடாத மொகமது ஷமி தற்போது மே.இ.தீவுகளுக்கு எதிராக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி கூறும்போது, “ஷமி உண்மையில் திறமை வாய்ந்த ஒரு பவுலர். அவரிடம் சிறப்பான திறமைகள் பலவுள்ளன. அவர் பந்தை ’ரிலீஸ்’ செய்வதும், பிட்ச் செய்வதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு துல்லியத்தை விடவும் கூடுதலானது.

பந்துகள் ஸ்விங் ஆகும் போது அவர் மரபான திசை மற்றும் அளவில் வீச முடியும். ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் எங்கிருந்து பந்தை சரியாக கொண்டு வரவேண்டும் என்பதை அவர் அறிவார். பேட்ஸ்மெனை எப்படி வீழ்த்துவது என்பது பற்றிய அறிவு மிக்கவர் ஷமி. அவரது மன உறுதி விவகாரத்தில் கொஞ்சம் அவருடன் தற்போது பணியாற்றி வருகிறோம். அவர் சீரான முறையில் வீச தற்போது அவரை உத்வேகப்படுத்தி வருகிறோம்.

அவர் காயமடைவதற்கு முன்னதாக அருமையான சீசன் அவருக்கு அமைந்தது. காயம் காரணமாக உலகக்கோப்பை டி20-யில் அவரால் ஆட முடியவில்லை. எனவே மீண்டும் அணிக்குள் வந்து தனது மதிப்பை நிரூபிக்க நிச்சயம் ஆவலாக இருப்பார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x