

உலக மகளிர் செஸ் அரையிறு திப் போட்டியில் இந்திய வீராங் கனையான ஹரிகா தோல்வி யடைந்தார்.
உலக மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி தெஹ்ரானில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான ஹரிகா, சீனாவின் டான் ஜோங் யியை எதிர்த்து ஆடினார். இவர்கள் இருவரிடையே வெள்ளிக்கிழமை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் டாங் ஜோங்யி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று முன்தினம் ஆடிய ஹரிகா அதில் போராடி வென்றார். இதனால் இரு வீராங்கனைகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை பெற்றனர். இதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வீராங்கனையை தீர்மானிக்க நேற்று டை பிரேக்கர் முறையில் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 99 நகர்த்தல் களுக்குப் பிறகு ஹரிகா தோல்வி யடைந்தார். இதைத்தொடர்ந்து உலக மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் அரை இறுதி சுற்றுவரை முன்னேறிய ஹரிகா வுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத் தது. இத்தொடரில் ஹரிகா வெண் கலப் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.