

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் வென்றுள்ள ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஷேன் வாட்சனுக்குப் பதிலாக கிறிஸ் கெய்லை சேர்க்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கிறிஸ் கெய்லை அணிக்குள் கொண்டு வரும் வழிவகையை ஆர்சிபி விரைவில் யோசித்து முடிவெடுக்க வேண்டும். கெய்ல் ஆடியே ஆக வேண்டும். ஷேன் வாட்சன் ஆல்ரவுண்டர் என்பதால் அவரை ஆட வைக்கின்றனர் என்று புரிகிறது. ஆனால் ஷேன் வாட்சன் ஆல்ரவுண்டராக ஒன்றும் செய்து விடவில்லை. அவர் தனது பழைய ஆட்டத்தில் ஒரு துளியைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்.எனவே வாட்சனுக்குப் பதில் கெய்லை சேர்க்க முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் கங்குலி.
தோனியின் தடுமாற்றங்கள் குறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்த கங்குலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி மிகச்சிறந்த வீரர், மேலும் இருமுறை உலகக்கோப்பையை வென்றுள்ளார் (2007 டி20, 2011 உலகக்கோப்பை) ஆனால் இவ்வளவு ஆண்டு டி20 கிரிக்கெட்டில் தோனி ஒரேயொரு அரைசதமே எடுத்துள்ளார். என்று கங்குலி கூறியது நினைவிருக்கலாம்.