

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பிலடெல்பியாவில் நேற்று நடந்த ஏ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவும் பராகுவே அணியும் மோதின. காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இப்போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட் டாயத்தில் இரு அணிகளும் இருந் ததால் ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே அனல் பறந்தது.
ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் அமெரிக்க வீரரான டெம்ப்சே, பராகுவே அணியின் தற்காப்பு வீரர்களை ஊடுருவிச் சென்று கோல் அடித்தார். இதன்மூலம் அமெரிக்க அணி 1-0 என்ற முன்னிலையை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தை சமன் செய்யும் முயற்சியில் பராகுவே வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆட்டத்தின் பெரும்பாலான நேரங் களில் பந்து பராகுவே வீரர்களின் வசத்திலேயே இருந்தது. ஆனா லும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அணி 1-0 என்ற கோல்கணக் கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற் றது. அமெரிக்க கண்டத்தின் பலம் வாய்ந்த அணிக ளில் ஒன்றான பராகுவே, 15 ஆண் டுகளுக்கு பிறகு கோபா அமெ ரிக்கா போட்டியின் முதல் சுற்றிலேயே வெளி யேறியது.
கோஸ்டா ரிகா வெற்றி
ஹூஸ்டன் நகரில் நேற்று நடந்த மற்றொரு ஏ பிரிவு போட் டியில் கொலம்பியாவுடன் கோஸ்டா ரிகா அணி மோதியது. இப்போட்டியில் கோஸ்டா ரிகா 3-2 என்ற கோல்கணக்கில் கொலம் பியாவை வென்றது. கோஸ்டா ரிகா அணியிடம் தோற்றாலும் முந்தைய 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால் கொலம்பியா அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற் றது.