மொகமது ஷமி கோபத்தை கட்டுப்படுத்திய தோனி

மொகமது ஷமி கோபத்தை கட்டுப்படுத்திய தோனி
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியினரை கிண்டல் செய்தனர்.

இந்திய அணியினர் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த போது சேவாக் ட்வீட்டை குறிப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ‘இப்போது அப்பா யார்?’ (பாப் கவ்ன் ஹே?) என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

அப்போது இந்திய வீரர் மொகமது ஷமி ரசிகரின் இந்தக் கேலியை பொறுக்க மாட்டாது அவரை நோக்கிச் சென்றார். ஆனால் தோனி அவரைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக சேவாக் தன் ட்வீட்டில், “தந்தையர் தினத்தன்று மகன் (பாகிஸ்தான்) அணியுடன் போட்டி, இது ஒரு ஜோக்தான் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் ரசிகர்களின் ஒரு சிறுபகுதியினர் இதைக் கருத்தில் கொண்டுதான் இந்திய அணியைக் கிண்டல் செய்தனர். கோபமடைந்த ஷமியை தோனி சமாதானம் செய்து அழைத்துச் சென்றது அவருக்கான பாராட்டுகளை சமூக வலைத்தளத்தில் ஈர்த்துள்ளது.

இந்த வீடியோ தற்போது பிரபலமாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in