Last Updated : 19 Jul, 2016 09:47 AM

 

Published : 19 Jul 2016 09:47 AM
Last Updated : 19 Jul 2016 09:47 AM

1924 பாரீஸ் ஒலிம்பிக்: களத்திலும் படத்திலும் அசத்திய வெய்ஸ் முல்லர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 8-வது ஒலிம்பிக் போட்டி 1924-ம் ஆண்டு மே 4-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன்மூலம் நவீன ஒலிம்பிக்கை 2 முறை நடத்திய ஒரே நகரம் என்ற பெருமை பாரீஸுக்கு கிடைத்தது. 44 நாடுகளைச் சேர்ந்த 135 வீராங்கனைகள், 2,954 வீரர்கள் என மொத்தம் 3,089 பேர் கலந்து கொண்டனர்.

17 விளையாட்டுகளில் 126 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டன. இந்த ஒலிம்பிக்கில் இருந்து தான், ‘ஒலிம்பிக் விளை யாட்டு கிராமம்' உருவாக்கும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. மேலும் நிறைவு விழாவும் நடத்தப் பட்டது.

இந்த ஒலிம்பிக்கில் தான் மாரத்தான் ஓட்டத்துக்கான தூரம் 42.195 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப்பட்டது. நீச்சல் குளத் தின் அளவும் முறைப்படுத்தப் பட்டு ஒவ்வொருவருக்கும் தனித் தனி லேன் அமைக்கப்பட்டது.

இந்த முறையும் வெறும் கை

இந்தியாவின் சார்பில் 7 தடகள வீரர்கள் பங்கேற்றாலும், பதக்கம் கிடைக்கவில்லை. முதல் உலகப் போரை முன்னின்று நடத்திய ஜெர்மனி இந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாமல் போனது. ஈக்வேடார், ஹைதி, அயர்லாந்து, லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, உருகுவே, லாட்வியா, போலந்து ஆகிய நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன.

முதல்முறையாக கலைப் பிரிவிலும் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 193 பேர் பங்கேற்றனர்.

இப்போட்டிக்கு மொத்தம் 14 பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆனாலும் இசைப் பிரிவில் பதக்கம் எதுவும் வழங்கப்பட வில்லை.

டெகத்லானில் சாதனை

அமெரிக்காவின் ஹரோல்ட் ஆஸ்பார்ன் உயரம் தாண்டுதல் மற்றும் டெகத்லான் போட்டி களில் தங்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் 6.6 அடி உயரம் தாண்டினார். இதன்மூலம் ஒலிம் பிக்கில் அதிக உயரம் தாண் டியவர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த சாதனை 12 ஆண்டுகளுக்குப் பிறகு முறிய டிக்கப்பட்டது. டெகத்லானிலும் 7,710.775 புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்தார்.

அமெரிக்கா ஆதிக்கம்

இந்த ஒலிம்பிக்கிலும் அமெரிக் காவே ஆதிக்கம் செலுத்தியது. 45 தங்கம், 27 வெள்ளி, 27 வெண் கலம் என மொத்தம் 99 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

பின்லாந்து 14 தங்கம், 13 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், போட்டியை நடத்திய பிரான்ஸ் 13 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

களத்திலும்... படத்திலும்

அமெரிக்காவின் ஜானி வெய்ஸ் முல்லர் ஒரே நாளில் 100 மீட்டர், மற்றும் 400 மீட்டர் ப்ரிஸ்டைல் நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றார். அதேநாளில் நடந்த வாட்டர் போலோ போட்டி களில் வெண்கலம் கைப்பற்றி னார். இவரது உடல் வலிமையை கண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர் கள், டார்சன் வேடத்தில் நடிக்க அழைத்தனர். ஒலிம்பிக் களத்தில் அசத்திய இவர் டார்சனாக 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

சாதனை வீரர் நுர்மி

கடந்த ஒலிம்பிக்கில் அசத் திய பின்லாந்தின் பாவே நுர்மி இந்த ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இப் போட்டி முடிந்த 55-வது நிமிடத் தில் 5,000 மீட்டர் ஓட்டம் தொடங்குவதாக அறிவிக்கப் பட்டது. இதனால் நுர்மியால் முதலிடம் பிடிக்க முடியாது என்ற கருத்து நிலவியது. ஆனால் மனம் தளராமல் ஓடி மீண்டும் தங்கம் வென்றார்.

தனிநபர் 5 ஆயிரம் மீட்டர் கிராஸ் கன்ட்ரி பிரிவு, அணி அளவிலான 5 ஆயிரம் மீட்டர் கிராஸ் கன்ட்ரி, 3 ஆயிரம் மீட்டர் அணி பிரிவு ஓட் டத்தில் தங்கம் வென் றார். மொத்தம் 5 தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். ஒரே ஒலிம்பிக்கில் தடகளத்தில் அதிக தங்கம் வென்றவர் என்ற சாதனை இன்றளவும் நர்மி வசமே உள்ளது. மற்றொரு பின்லாந்து வீரரான வில்லே ரிடோலா 10,000 மீட்டர் ஓட்டத்தில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். இவர் 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x