இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி

இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி
Updated on
1 min read

மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 64, மோனா மேஷ்ராம் 55 ரன்கள் சேர்த்தனர்.

206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 46.4 ஓவர்களில் 156 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in