Last Updated : 13 Oct, 2014 09:14 PM

 

Published : 13 Oct 2014 09:14 PM
Last Updated : 13 Oct 2014 09:14 PM

ஹுத்ஹுத் புயலால் 3-வது போட்டி ரத்து: முதலிடத்தை இழந்தது இந்திய கிரிக்கெட் அணி

சர்வதேச கிரிக்கேட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

ஆந்திரா, ஒடிஷாவை தாக்கிய ஹுத்ஹுத் புயல் இந்திய கிரிக்கெட் அணியிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)நேற்று வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

புயல் காரணமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்க இருந்த இந்தியா- மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா சர்வதேச ஒருநாள் தரவரிசையில் தனி அணியாக முதலிடம் பிடித்தது. ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்த இந்தியா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தென்னாப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது இந்த பின்னடைவுக்கு ஒரு காரணமாகும்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3-வது போட்டி நடைபெற்று அதில் இந்தியா வெற்றி பெற்று, அதற்கு அடுத்த இரு போட்டிகளிலும் தொடர்ந்து இந்தியா வெற்றி பெற்றிருந்தால், தொடரின் இறுதியில், தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்க முடியும்.

ஆனால் இந்தியாவுக்கு இனி 2 போட்டிகள் மட்டுமே உள்ளது. அவை இரண்டிலும் வெற்றி பெற்றாலும், 2-வது இடத்தைத்தான் இந்தியா அணியால் பிடிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x