

ஜிம்னாசியம் மகளிர் பிரிவில் திபா கர்மாகர் அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தி நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டார். மொத்தமாக இவர் 15.066 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் முடிந்தார்.
ஆனாலும் ஜிம்னாஸ்டிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய வீராங்கனை சாதனை நிகழ்த்தியது ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
முதல் வால்ட்டில் 14.886 எடுத்த தீபா கர்மகர், இறுதியில் 15.066 எடுத்து 4-வதாக முடிந்தார், 3-வது இடம்பிடித்த சுவிஸ் வீராங்கனை கியுலியா ஸ்டெய்ன்குரூபரைக் காட்டிலும் 0.15 புள்ளிகளே தீபா குறைவாக பெற்றார்.
தோல்வி குறித்து திபா கர்மாகர் கூறும்போது, “எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்தேன். 4-வதாக முடிந்தது வருத்தமளிக்கிறது, 5-வது அல்லது 6-வது இடம்பிடித்திருந்தால் வருத்தமாக இருக்காது, ஆனால் 4-வது இடம்!!
தங்கம் எதிர்பார்த்தது போல் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் (15.966) என்பவருக்கு கிடைத்தது. உலக சாம்பியனான ரஷ்யாவின் மரியா பசேகா 15.253 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.