

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பௌலர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருடன் மேற்கிந்தியத் தீவுகள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 4-வது இடத்திலும், இந்திய கேப்டன் தோனி தொடர்ந்து 7-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 16-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
பௌலர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் அஸ்வின், புவனேஸ்வர் குமார் ஆகியோர் முறையே 18 மற்றும் 20-வது இடங்களில் உள்ளனர்.
பௌலர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளார் ஜடேஜா. அவர் இப்போது 4-வது இடத்தில் உள்ளார். ஷேன் வாட்சன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.